தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 50
✴ நபி (ஸல்) விடம் ஒரு பெண் மார்க்கத்தீர்ப்பு கேட்டு வந்தபோது உடனிருந்த பள்லு இப்னு அப்பாஸ் (ரலி) அந்த பெண்ணை திரும்ப திரும்ப பார்த்தபோது நபி (ஸல்) தன் கைகளால் இப்னு அப்பாஸ் (ரலி) அவரது தாடையை பிடித்து முகத்தை திருப்பி விட்டார்கள்.(புஹாரி, முஸ்லீம்)
انما جعل الاستئذان من اجل البصر
சஹல் இப்னு சஹத் (ரலி) – நபி (ஸல்) – அனுமதி பெறவேண்டும் என்பது வலியுறுத்தப்படுவது உங்கள் பார்வைக்காக தான்.
يا علي لا تتبع النظرة النظرة فإنما لك الأولى وليست لك الآخرة
நபி (ஸல்) – அலியே அந்நிய பெண்ணை திரும்ப திரும்ப பார்க்காதே முதல் பார்வை உன்னுடையது மீண்டும் பார்ப்பது உனக்கெதிரானது (அஹ்மத்)
கருத்துரைகள் (Comments)