தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 52
❤ வசனம் 31:
وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا
வெளிப்படுத்த வேண்டாம் – وَلَا يُبْدِيْنَ
அவர்களுடைய அலங்காரத்தை – زِيْنَتَهُنَّ
தவிர – اِلَّا
சாதாரணமாக வெளியில் தெரிபவற்றை தவிர – مَا ظَهَرَ مِنْهَا
❖ சாதரணமாக வெளியில் தெரிவது கருத்துக்கள் :
{ ஒரு பெண் இஸ்லாமிய ஆடை அணிந்த பின்னும் அவளுக்கு உள்ள அழகு }
சில அறிஞர்கள் – முகத்தையும் மணிக்கட்டு வரையுள்ள கைகளையும் அது குறிக்கும்.
சில அறிஞர்கள் – அவசியம் பெண்கள் முகத்தை மூட வேண்டும்.
சில அறிஞர்கள் – முகத்தை மறைத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக வாதிடுகின்றனர். சிலர் கட்டாயம் மறைத்தாக வேண்டும் என்ற தேவையில்லை என்கின்றனர். ஆனால் மறைக்கக் கூடாது என்று பேசுகின்றார்கள் அது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து அல்ல.
❖ பெண்கள் முகத்தை மறைத்தே ஆக வேண்டும் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ நேரடியாக வரவில்லை. ஆகவே தான் இதில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.ஆகவே இது இஜ்திஹாதுடன் சம்பந்தப்பட்ட விஷயம்.
❖ பொதுவாக ஒரு பெண் முகத்தை திறப்பதனால் பித்னா உருவாக்கும் என்று இருந்தால் அவள் மறைப்பதே சிறந்ததாகும். மறைப்பதால் பித்னா உருவாகும் என்றிருந்தால் திறப்பதே சிறந்ததாகும்.
❖ ஆகவே முகத்தையும் மணிக்கட்டு வரையிலான கைகளையும் தவிர மற்ற அனைத்தும் மறைத்தே ஆக வேண்டியவை என்பதில் கருத்துவேறுபாடு இல்லை.
கருத்துரைகள் (Comments)