தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 61
❤ஸூரத்துல் முஃமினூன் 23: 5, 6, 7
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ
(5) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَۚ
(6) ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۚ
(7) ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن ❊
للفرج ، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء
இப்னு மசூத் (ரலி) – இளைஞர்களே உங்களில் சக்தியுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
அது உங்கள் பார்வைகளை தாழ்த்தச் செய்யும் ↔️ فإنه أغض للبصر
உங்களுடைய கற்பை அது பாதுகாக்கும் ↔️ وأحصن للفرج
யாரால் அதற்கு சக்திபெறவில்லையோ ↔️ ومن لم يستطع
அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும் ↔️ فعليه بالصوم
(முஸ்னத் அஹ்மத்)
கருத்துரைகள் (Comments)