தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 67
مَثَلُ نُوْرِهٖ
அவனுடைய ஒளிக்கு(அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு உள்ளத்தில் ஹிதாயத்தை ஈமானை கொடுத்திருக்கிறான்) உதாரணம்
ஒரு மாடம் போன்றது ↔ كَمِشْكٰوةٍ
அதில் ஒரு விளக்கிருக்கிறது ↔ فِيْهَا مِصْبَاحٌ ؕ
அந்த விளக்கு ஒரு கண்ணாடிக்குள் இருக்கிறது ↔ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ ؕ
அந்த கண்ணாடி மின்னுகின்ற நட்சத்திரம் போன்றது ↔ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ
பரக்கத் நிறைந்த ஜைத்தூன் மரத்தின் எண்ணெயை கொண்டு அது மூட்டப்படுகிறது ↔ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ
அந்த விளக்கு கிழக்கிலுமில்லை மேற்கிலுமில்லை ↔ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ
அந்த எண்ணெய் நெருப்பு மூட்டாமலேயே பிரகாசிக்கக்கூடியது ↔ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ
⭕அல்லாஹ் முஃமினுடைய உள்ளத்தை கண்ணாடியுடன் ஒப்பிடுவதன் மூலம் அது மென்மையானது என்று கூறுகிறான்.
❤ சூரா அல்ஃபத்ஹ் 48:29
முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்.
❤ சூரா அல் அன்பியா 21:107
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
❤சூரா அத்தவ்பா 9 : 128
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ
رَءُوْفٌ رَّحِيْمٌ
இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் இரக்கமும் உடையவராக இருக்கின்றார்.
❤ சூரா ஆலுஇம்ரான் 3 : 159
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்…..
⭕நபி (ஸல்)வின் மென்மையான உள்ளம்- மிக கடுமையான எதிரிகளையும் மன்னிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
கருத்துரைகள் (Comments)