தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 75

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 75

 வசனம் – 37

رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙ يَخَافُوْنَ

يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ

 சில மனிதர்களை வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ தடுக்காது. ↔ رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ

தொழுகையை நிலைநாட்டுவதிலிருந்தும் ↔ وَاِقَامِ الصَّلٰوةِ

 ஜகாத் கொடுப்பதிலிருந்தும் ↔ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌

ۙஅந்த நாளை அஞ்சுவார்கள்  يَخَافُوْنَ يَوْمًا

உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும் அதில் தடுமாறும் ↔ تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ‏

(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

❤ சூரா அல் பகறா 2 : 281

اتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ اِلَى اللّٰهِ

தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்.

 வசனம் : 38

وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ

شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ‌ ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ‏

அல்லாஹ் அவர்களுக்கு கொடுப்பான் ↔  لِيَجْزِيَهُمُ اللّٰهُ

அவர்கள் செய்த அமல்களுக்கு மிக அழகானதை ↔ اَحْسَنَ مَا عَمِلُوْا

அவனுடைய அருளிலிருந்து அதிகப்படுத்துவதற்காகவும் ↔ وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖ‌ؕ

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க் அளிக்கிறான்  وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ

கணக்கின்றி கொடுக்கிறான் ↔ بِغَيْرِ حِسَابٍ‏ 

அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.