தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 8

தஃப்ஸீர்

சூரத்து நூர் பாகம் – 8

 வசனம் 4

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً

وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏

கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவர்கள் ↔ وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ

பிறகு அவர்கள் 4 சாட்சிகளை கொண்டு வரவில்லை ↔ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ

அவர்களை 80 கசையடி அடியுங்கள் ↔ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً

அவர்களது சாட்சியங்களை எக்காலத்திலும் ஏற்காதீர்கள் ↔ وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌

அவர்கள்தான் பாவிகள் ↔ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ ‏

   எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.

 நபி(ஸல்) – மிஃராஜில் – செம்பாலான நகங்களை கொண்டு தம்மை தாமே கீறிக்கொள்பவர்களை கண்டார்கள் – பிறரை பற்றி பேசியவர்கள்.

கருத்து:

ஒரு விபச்சாரத்தை (மேற்கூறப்பட்ட சுர்மா உதாரணம் அடிப்படையில் உள்ள) ஒருவர் பார்த்தால் அதை பற்றி பேசாமல் இருப்பது சிறந்தது, இருவரோ மூவரோ பார்த்தாலும் மௌனம் காப்பதே சிறந்தது, 4 பேர் பார்த்தால் அவர்கள் அதை பற்றி வெளியே கூறலாம், கூறாமலும் இருக்கலாம்.

 மாயிஸ் (ரலி) நபி (ஸல்) விடம் தம்மை பரிசுத்தப்படுத்த கூறினார்கள். நபி (ஸல்) – அவருக்கு பைத்தியமா,போதையருந்தி இருக்கிறாரா என்றெல்லாம் கேட்டார்கள் பிறகு தனிமையில் இருந்திருப்பாய், முத்தமிட்டிருப்பாய் தவ்பா செய், அப்படி பல முறை அவரது மானத்தை காப்பாற்ற நபி (ஸல்) முயற்சித்தார்கள். அவரை ஓடவிட்டிருக்கலாமல்லவா, மடக்கிப்பிடித்தவரிடம் நீ அவரை உன் ஆடையால் மறைத்திருக்க கூடாதா என நபி (ஸல்) கேட்டார்கள்.

فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيهِ المُسْلِمِ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ

 இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் தன்னுடைய சகோதரனுடைய குறைகளை தேட ஆரம்பிக்கிறானோ அவனுடைய குறைகளை அல்லாஹ் தேடுகிறான்.(திர்மிதி)