தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 81

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 81

💠ருகூவில் سبحان ربى العظيم என்று கூறுவதன் மூலம் தஸ்பீஹ் செய்கிறோம்

💠சுஜூதில் سبحان ربى الاعلى என்று சொல்கிறோம்

❤ சூரா அந்நஸ்ர் 110 : 3

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏

உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

💠இந்த வசனம் இறங்கியதிலிருந்து நபி (ஸல்) ருகூவிலும் சுஜூதிலும்

بحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي

என்று சொல்வதை விடவில்லை(புஹாரி,முஸ்லிம்).

💠நபி (ஸல்) ருகூவிலும் சுஜூதிலும் –

سبوح قدوس رب الملائكة والروح

(முஸ்லீம்).

💠 நபி (ஸல்) – திருடனின் மிக மோசமானவன் தொழுகையில் திருடுபவன் – ருகூவையும் சுஜூதையும் பூரணமாக செய்ய மாட்டான்.