தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 86

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 86

 வசனம் : 45

وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ‌ۚفَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى بَطْنِهٖ‌ۚ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى

رِجْلَيْنِ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰٓى اَرْبَعٍ‌ؕ يَخْلُقُ اللّٰهُ مَا يَشَآءُ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏

↔ وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்

↔ فَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى بَطْنِهٖ‌ۚ

அவற்றில் சில தன் வயிற்றால் நடந்து (ஊர்ந்து) செல்கின்றன

↔ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى رِجْلَيْنِ

அவற்றில் சில இரண்டு கால்களால் நடந்து செல்கின்றன

 وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰٓى اَرْبَعٍ‌ؕ

அவற்றில் சில நான்கு  கால்களால் நடந்து செல்கின்றன

 يَخْلُقُ اللّٰهُ مَا يَشَآءُ‌ؕ 

அல்லாஹ் நாடியதைப்படைக்கிறான்

اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ↔ ‏

நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.

💠43-45 வசனங்களில் அல்லாஹ்  தன்னுடைய வல்லமையை எடுத்துரைக்கின்றன்.

💠நூஹ் (அலை) இடம் தண்ணீருக்கு சம்மந்தமில்லாத இடத்தில் கப்பல் செய்ய கட்டளையிட்டான்

💠இப்ராஹிம் (அலை) நெருப்பில் இட்டபோது நெருப்பிடம் குளிர்ச்சியாக சலாமாக இருக்க சொன்னான்.

💠அனைத்திற்கும் ஆற்றலுடையவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே

💠கஃபாவை இடிக்க வந்த யானைப்படைகளை அழித்தவன் அல்லாஹ். அவனது ஆற்றலை முஸ்லிம்கள் அறிந்தவர்களாக இருப்பார்கள்.