தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 87
❤ வசனம் : 46
لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍؕ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
↔ لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍؕ
தெளிவுபடுத்தக்கூடிய அத்தாட்சிகளை(வசனங்களை) நாம் இறக்கினோம்.
↔ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
💠 முன் கூறப்பட்ட வசனங்களில் அல்லாஹ் பிரபஞ்ச அத்தாட்சிகள் பல எடுத்துக்கூறினாலும் நேர்வழி என்பது அவனுடைய கையில் தான் இருக்கிறது அதை தான் நாடியவருக்கு தருகிறான்.
💠 நபி (ஸல்) – அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களின் மூலம் ஒரு மனிதனுக்கு நேர்வழி கிடைப்பதென்பது அது பல சிவப்பு ஒட்டகங்கள் சொந்தமாக இருப்பதை விட சிறந்தது.
عم قل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله
நபி (ஸல்) தன்னுடைய தந்தையின் சகோதரர் அபூதாலிபின் மரண நேரத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள் அதை வைத்து அல்லாஹ்விடம் நான் உங்களுக்காக வாதாடுவேன் என்றார்கள். அப்போது அல்லாஹ்
❤ ஸூரத்துல் கஸஸ் 28:56
(நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் – மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.
என்ற வசனத்தை இறக்கினான்.
💠 நூஹ் (அலை) 950 வருடங்கள் மக்களை திருத்த முயற்சி செய்தார்கள்.
❤ ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா 41:33
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)
கருத்துரைகள் (Comments)