தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 90

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 90

❤ வசனம் : 49

وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ‏

ஆனால், அவர்களின் பக்கம் – உண்மை (நியாயம்) இருக்குமானால் ↔ وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ

வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள் ↔ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ

💠 குர்ஆன் ஹதீஸ் அவர்களுக்கு சாதகமாக இருந்தால் அதை பின்பற்றுவார்கள். இல்லையென்றால் கட்டுப்பட மாட்டார்கள்.

💠 இமாம் தபரி (ரஹ்) – பிஷ்ர் என்ற முனாபிக் ஒரு யூதனோடு வியாபாரம் மேற்கொண்டபோது யூதனின் பக்கம் நியாயமிருந்தது. அப்போது யூதன் கூறினான் நபி (ஸல்) விடம் தீர்ப்பு கேட்டு போவோம் என்றான். ஆனால் பிஷ்ர் கூறினான் நாம் கஹப் இப்னு அஷ்ரபிடம் (யூதனிடம்)செல்வோம் என்றான்.