தஃப்ஸீர்
ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 5
✤ அந்த விபசாரத்தில் ஈடுபட்ட பெண்மணி தன்னை பரிசுத்தப்படுத்தக்கோரி நபி(ஸல்) விடம் வந்த போது நபி(ஸல்) பல கேள்விகளை கேட்டு திரும்பி அனுப்ப முயற்சித்த போது அவர்கள் கர்ப்பமாக இருந்ததை அறிந்து திருப்பியனுப்பினார்கள். பிள்ளையை பெற்றுவிட்டு மீண்டும் அவர் வந்த போது 2 வருடம் பால் கொடுத்துவிட்டு வர சொன்னார்கள். பிறகு அவர் வந்த போது அவரை ஒரு குழியில் இட்டு கல்லெறிந்து கொல்லச்சொன்னார்கள். காலித் (ரலி) அவர்களது இரத்தத்தை கண்டு அருவெறுப்பு பட்ட போது நபி(ஸல்) கூறினார்கள் இந்தப்பெண்ணின் பாவமன்னிப்பை மதினாவில் உள்ள 70 பேருக்கு பங்கு வைத்தாலும் மிஞ்சிவிடும் என்கிறார்கள்.
✤ இரவின் 3 வது பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு வந்து என்னிடம் பாவமன்னிப்பு கேட்க யாரேனும் இருக்கிறீர்களா என்று அல்லாஹ் கேட்கிறான்.
கருத்துரைகள் (Comments)