ஃபிக்ஹ் பாகம் – 2
சுத்தம் – தயம்மும்
جعلت الأرض كلها لي ولأمتي [ ص: 324 ] مسجدا وطهورا ، فأينما أدركت
رجلا من أمتي الصلاة فعنده مسجده وعنده طهوره } أحمد ) .
அபூ உமாமா (ரலி) – பூமியெல்லாம் என்னுடைய உம்மத்திற்கு தொழுமிடமாகவும் சுத்தமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய உம்மத்தில் ஒருவருக்கு எங்கிருந்த போதும் அவருக்கு தொழுகை வந்து விட்டால் அங்கேயே அவருடைய தொழுகைக்காக உளூ செய்யக்கூடிய பொருள் இருக்கிறது. (அஹ்மத்)
ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – எனக்கு முன் சென்ற சமூகத்திற்கு கொடுக்கப்படாத 5 விஷயங்கள் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
✥ ஒரு மாத தொலைதூரத்திற்கு பயத்தை கொண்டு உதவி செய்யப்பட்டிருக்கிறேன்,
✥ எனக்கு பூமி முழுவதும் தொழுமிடமாகவும் சுத்தம் செய்யுமிடமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது, என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதருக்கு எங்கு தொழுகை வந்தாலும் அவர் தொழுது கொள்ளலாம்,
✥ எனக்கு கனீமத் (யுத்தத்தில் கிடைக்கும் பொருட்கள்) ஹலாலாக்கப்பட்டிருக்கிறது,
✥ சிபாரிசு செய்யும் வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது,
✥ ஒவ்வொரு நபியும் அவர்களுடைய கூட்டத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பப்பட்டார் நான் உலகத்திற்கு நபியாக அனுப்பப்பட்டிருக்கிறேன்.
கருத்துரைகள் (Comments)