ஃபிக்ஹ் பாகம் – 3
சுத்தம் – தயம்மும்
[highlight color=”green”]தயம்மும் எப்போது கடமையாக்கப்பட்டது?[/highlight]
ஆயிஷா (ரலி)-நபியவர்களுடன் ஒரு பிரயாணத்தில் நாங்கள் இருந்தோம். ‘பைதா என்ற இடத்தை அடைந்த போது என்னுடைய ஒரு மாலை அறுந்து எங்கேயோ விழுந்துவிட்டது. அதனைத் தேடுவதற்காக நபியும், நபித்தோழர்களும் அங்கேயே தங்கினார்கள். அந்த இடத்திலோ, எங்களிடத்திலோ தண்ணீர் இருக்கவில்லை. மக்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து, “ஆயிஷா செய்த வேலையைப் பார்த்தீர்களா?” என்று கூறினர். நபி (ஸல்) அவர்களோ என் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்த நிலையில், அபூபக்கர் (ரலி) என்னை நோக்கி வேகமாக வந்தார். வந்தவர் என்னிடம் சப்தம் போட்டார். அல்லாஹ் நாடிய அளவுக்கு என்னை குறை கூறி, தம் கைகளால் என் விலாப்புறத்தில் குத்தினார். அப்போது நபி (ஸல்) என்னுடைய மடியில்தலையை வைத்துப் படுத்துக் கொண்டு இருந்ததால், நபியவர்கள் விழித்துவிடக்கூடும் என்பதால் நான் அசையாமல் இருந்தேன். அப்போது தான் அல்லாஹ் தயம்முமின் ஆயத்தை இறக்கினான்.உஸைத் இப்னு ஹுலைல் (ரலி) – அபூபக்கர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரே உங்கள் குடும்பத்தின் மூலமாக அல்லாஹ் இந்த சமூகத்திற்கு தந்த பல அருள்களில் இதுவும் ஒன்று என்று கூறினார்கள்.
பிறகு நாங்கள் எந்த ஒட்டகத்தில் பிரயாணம் செய்து வந்தோமோ அதற்கு கீழ் தான் என்னுடைய மாலை இருந்தது.(புஹாரி, முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)