ஃபிக்ஹ் பாகம் – 5
சுத்தம் – தயம்மும்
🏵 நோயின் காரணமாக தண்ணீர் உபயோகிக்க முடியாமலிருப்பது
நோயின் காரணமாக தண்ணீர் உபயோகிக்க முடியாமலிருப்பது
ஜாபிர் (ரலி) -நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். எங்களில் ஒருவருடைய தலையில் ஒரு கல் பட்டதால் காயம் ஏற்ப்பட்டது. பின்னர் அவருக்கு குளிப்பும் கடமையானது. “எனக்கு தயம்மும் செய்வதற்கு ஏதேனும் அனுமதி உள்ளதா”? என்று தம் தோழர்களிடம் கேட்டார். “தண்ணீர் இருக்கும் பட்சத்தில் தயம்மும் செய்வதற்கு அனுமதியில்லை” என அவர்கள் கூறினார்கள். அதைக்கேட்ட அவரும் குளித்தார். அதனால் மரணமடைந்துவிட்டார். நாங்கள் நபிகளாரிடம் வந்து விவரம் கூறிய போது நபி (ஸல்)- அவரை அவர்கள் கொன்றுவிட்டனர்! அவர்களை அல்லாஹ்-வும் மரணமடைய செய்வானாக! தெரியாவிட்டால் அவர்கள் விசாரித்திருக்கலாமே! கேள்விதான் அறியாமையின் மருந்து! அவர் தயம்மும் செய்யவோ காயமான இடத்தில் ஒரு துணியால் கட்டி அதன் மேல் மஸஹ் செய்து உடலின் மீதிப் பாகங்களை கழுவினாலோ போதுமானது தானே!!!!!
(அபூதாவூத், தாரகுத்னீ)
கருத்துரைகள் (Comments)