ஃபிக்ஹ் பாகம் – 6
சுத்தம் – தயம்மும்
🏵 கடுமையான குளிர்
அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – “தாதுஸ்ஸலாஸில்” என்ற போருக்கு நான் அனுப்பப்பட்ட போது குளிர் கடுமையாக இருந்தது. அத்துடன் எனக்கு குளிப்பும் கடமையானது. குளித்தால் இறந்துவிடுவேன் என்று எனக்கு பயம் உண்டானது. எனவே, தயம்மும் செய்த உடன் வந்த தோழர்களுக்கு இமாமாக ஸூபுஹ் தொழவைத்தேன். நாங்கள் நபிகளாரிடம் வந்த போது நடந்த சம்பவத்தை தோழர்கள் கூறினார்கள். நபி (ஸல்) என்னிடம் கேட்டார்கள். “அம்ரே! உங்களுக்கு குளிப்புக் கடமையான நிலையில் தோழர்களுக்கு சுபுஹூத் தொழுகையை தொழ வைத்தீர்களா?என்று அதற்கு நான் கூறினேன் எனக்கு இந்த ஆயத்து நினைவிற்கு வந்தது, ஸூரத்துன்னிஸாவு 4:29.(…நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்)என்ற வசனம் நினைவிற்கு வந்தது ஆதலால் நான் குளிக்காமல் தயம்மும் செய்து மக்களுக்கு தொழ வைத்தேன் என்று கூறியதை கேட்டு நபி (ஸல்) சிரித்தார்கள் (அஹ்மத், அபூதாவூத், ஹக்கீம், தாரகுத்னீ, இப்னு ஹிப்பான்)
கருத்துரைகள் (Comments)