ஃபிக்ஹ்
தொழுகையின் ஃபர்ளுகள்
பாகம் – 10
சுஜூதிலிருந்து எழுந்திருப்பது
🌼 நபி (ஸல்) – உங்களிலொருவரது தொழுகையில் முழுமையாக அமரும் வரை சுஜூதிலிருந்து எழுந்து அமர வேண்டும்.
(ஸுனன் அபூதாவூத், முஸ்தத்ரக் ஹாக்கிம் )
🌼 நபி (ஸல்) – தக்பீர் சொல்லி விட்டு 2 சுஜூதுகளுக்கு மத்தியில் அமர வேண்டும் (புஹாரி, முஸ்லீம்)
🌼 ஆகவே 2 சுஜூதுகளுக்கு மத்தியில் அமர்வது கடமையாகும்.
எப்படி அமர வேண்டும்:
🌼 அமைதியான முறையில் அவர் தனது இடது காலுக்கு மேல் அமர வேண்டும். வலது காலை நட்டு வைத்ததாக இருக்க வேண்டும் அதன் விரல்கள் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்க வேண்டும்.
🌼 நபி (ஸல்) – நீங்கள் சுஜூதிலிருந்து எழுந்தால் உங்களது இடது தொடையின் மீது அமருங்கள் (அஹ்மத், அபூ தாவூத்)
🌼 நபி (ஸல்) அவர்கள் தனது வலது கால் பாதத்தை நட்டு வைத்தவர்களாக அமருவார்கள்(புஹாரி, பைஹகீ)
🌼 நபி (ஸல்) அவர்களது விரல்கள் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்கும்.
இரண்டு சுஜூதுகளுக்கு மத்தியில் அமருதல்
🌼 நபி (ஸல்) அவர்கள் சுஜூதிலிருந்து எழுந்து வலது காலின் மீது அமர்ந்து இடது காலை நட்டு வைத்திருப்பார்கள். வலது காலின் விரல்கள் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்கும்(ஸுனன் நஸயீ)
🌼 அத்தஹிய்யாத்தில் அமருதல் மேலும் தஷாஹ்ஹுத் ஓதுதல்
நபி (ஸல்) – இறுதி ஸுஜுதிலிருந்து உங்கள் தலையை உயர்த்தி பின் தஷாஹ்ஹுத் ஓதுவதற்காக அத்தஹிய்யாத்தில் நீங்கள் அமர்ந்தால் உங்களுடைய தொழுகை நிறைவேறி விடும்.
ابنِ مسْعودٍ رضي الله عنه قال: كُنَّا إِذا كُنّا مَعَ النَّبِيِّ صلَّى اللهُ عَلَيْهِ وسَلَّمَ في الصَّلاةِ قُلْنا: السَّلامُ عَلى اللهِ مِنْ
عِبادِه، السَّلام على فُلانٍ وفلانٍ، فَقالَ النَّبِيُّ صلَّى اللهُ عَلَيْهِ وسَلَّمَ: ((لا تَقُولوا السَّلامُ عَلى اللهِ فإنَّ اللهَ هُوَ السَّلامُ
قولُهُ: (السَّلامُ على فُلانٍ وفلانٍ) أيْ: جبريلَ وميكائيلَ.
இப்னு மசூத் (ரலி) – தஷாஹ்ஹுத் கடமையாக்கப்படுவதற்கு முன்னர் நாங்கள் السَّلامُ عَلى اللهِ مِنْ عِبادِه، السَّلام على فُلانٍ وفلانٍ என்று செல்பவர்களாக இருந்தோம் அப்போது நபி (ஸல்) அவ்வாறு சொல்ல வேண்டாம் ஏனெனில் அல்லாஹ் ஸலாம் ஆக இருக்கிறான் அவன் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று நீங்க கூற வேண்டாம் என எங்களை தடுத்தார்கள். பிறகு அத்தஹிய்யாத்தை கற்றுத்தந்தார்கள்.
(ஸுனன் அபீதாவுத், ஹாகிம்)
🌼 தஷாஹ்ஹுத் பல விதமான அறிவிப்புகளில் இடம்பெற்றிருப்பினும் மிகவும் ஆதாரபூர்வமானதாக இப்னு மசூத் (ரலி) அவர்கள் வழியாக இடம்பெறுகிறது.
تشهد ابن مسعود رضي الله عنه : ( التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ) رواه البخاري (6265) ومسلم (402) .
السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ –
வானத்திலும் பூமியிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் இருக்கக்கூடிய அனைத்து நல்லடியார்களுக்கும் இந்த துஆ சென்றடையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
🌼 இதற்கு அடுத்த தரத்தில் உள்ள ஹதீஸாக
رواية ابن عباس رضي اللّه عنهما:
عن رسول اللّه صلى اللّه عليه وسلم: ”التَّحِيَّاتُ المُبارَكاتُ الصَّلَواتُ الطَّيِّباتُ لِلَّهِ، السَّلامُ عَلَيْكَ أيُّهَا النَّبيُّ وَرَحْمَةُ
اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلامُ عَلَيْنا وعلى عِبادِ اللّه الصَّالِحينَ، أشْهَدُ أنْ لا إلهَ إِلاَّ اللَّهُ، وَأشْهَدُ أنَّ مُحَمَّداً رَسُولُ اللَّهِ” رواه مسلم في صحيحه
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆனை கற்றுத்தருவது போல தஷாஹ்ஹுதை கற்றுத்தந்தார்கள்.(முஸ்லீம், அபூதாவூத், நஸயீ)
தொழுகை முறைப்படி செய்ய வேண்டும்
இறுதியாக ஸலாம் சொல்லுவது
{ مفتاح الصلاة الطهور ، وتحريمها التكبير ، وتحليلها التسليم
அலி (ரலி) – நபி (ஸல்) – தொழுகையின் சாவி சுத்தமாகும், அதன் ஆரம்பம் தக்பீரும் அதன் முடிவு ஸலாமும் ஆகும் (அபூதாவூத், திர்மிதி)
🌼 ஆமிர் இப்னு சஹத் (ரலி) தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள் – நாங்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஸலாம் சொல்லும்போது அவர்களது வலது கன்னத்தின் வெண்மையை நாங்கள் பார்ப்போம் (அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா, திர்மிதி)
கருத்துரைகள் (Comments)