ஃபிக்ஹ் பாகம் – 5
தொழுகையின் ஃபர்ளுகள்
(3) சூரத்துல் ஃபாத்திஹாவை ஒவ்வொரு ரகாஅத்திலும் ஓத வேண்டும்:
🌼 لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب
உபாதா இப்னு ஸாமித் (ரலி) – நபி (ஸல்) – சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாதவரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.
🌼 من صلى صلاة لم يقرأ فيها بفاتحة الكتاب فهي خداج فهي خداج غير تمام
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யார் சூரத்துல் ஃபாத்திஹா ஓதாமல் தொழுகிறாரோ அது முழுமையில்லாத தொழுகையாகும்(புஹாரி, முஸ்லீம்)
🌼 صلوا كما رأيتموني أصلي
நபி (ஸல்) – என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்.
🌼 இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்த்தாலும் நபி (ஸல்) தனது தொழுகைகளில் அனைத்திலும் சூரத்துல் ஃபாத்திஹா ஓதியதாக காண முடிகிறது.
கருத்துரைகள் (Comments)