ஃபிகஹ் பாகம் – 5
தொழுகையின் நிபந்தனைகள்
(4) மறைக்கவேண்டிய பாகங்களை மறைக்க வேண்டும்
ஆணுக்கு தொப்புள் முதல் முழங்கால் வரை
பெண்ணுக்கு முகத்தையும் மணிக்கட்டு வரையுள்ள முன் கைகளையும் தவிர மற்ற அனைத்தையும் மறைக்க வேண்டும் .
ஸூரத்துல் அஃராஃப் 7:31
يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்;
عن ابن شهاب ، عن سعيد بن المسيب أن رسول الله – صلى الله عليه وسلم – قال : من أكل من هذه الشجرة ، فلا يقرب
مساجدنا يؤذينا بريح الثوم
சயீத் இப்னு முஸய்யிப் (ரலி) – நபி (ஸல்) – யார் இவற்றை உண்ணுகிறார்களோ (வெங்காயம், பூண்டு) அவர்கள் எங்களது மஸ்ஜிதுகளை நெருங்க வேண்டாம்.
ஸூரத்துல் ஹஜ் 22:32
ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.
கருத்துரைகள் (Comments)