தொழுகையின் நிபந்தனைகள் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6

தொழுகையின் நிபந்தனைகள்

(5) கிப்லாவை முன்னோக்கியிருக்க வேண்டும்

கிப்லாவை முன்னோக்கி தொழ முடியாத சூழ்நிலையில் முடிந்தளவு கிப்லாவை முன்னோக்கி; பிறகு இருக்கும் திசையில் தொழுகையில் தொடர வேண்டும்.

ஸூரத்துத் தஃகாபுன் 64:16

فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ….

ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்

⚜ நோயாளிகளாக இருப்பவர்களுக்கோ, அல்லது நிர்பந்தமான சூழலில் அகப்பட்டு கிப்லாவை முன்னோக்க முடியாதவர்களுக்கோ வேறு வழி இல்லாத காரணத்தினால் கிப்லாவை முன்னோக்கி தொழ முடியவில்லையென்றால் வேறு திசையில் முன்னோக்கி தொழுவதில் அவர்கள் மீது குற்றமில்லை.