தொழுகையின் முக்கியத்துவம் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4

தொழுகையின் முக்கியத்துவம்

 عن جابر قال : قال رسول الله صلى الله عليه وسلم : { بين الرجل وبين الكفر

ترك الصلاة }

🍒 ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – ஒரு மனிதனுக்கும் இறைநிராகரிப்புக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதே (புஹாரி)

 قال رسول الله صلى الله عليه وسلم إن العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها

فقد كفر

🍒 புரைதா (ரலி) – நபி (ஸல்) நமக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கு மத்தியிலுள்ள உடன்படிக்கை தொழுகை தான் அதை விட்டவர் அவர் அல்லாஹ்வை நிராகரித்து விட்டார்(அஹ்மத், திர்மிதி, நஸயீ,இப்னு மாஜா, அபூதாவூத்)

🍒 இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்று சொல்லி தொழுகையை நிலை நாட்டி ஜகாத் கொடுக்கும் வரை மக்களுடன் போர் செய்ய நான் ஏவப்பட்டுள்ளேன். எவர் அதை செய்தாரோ அவர் என்னிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாத்துக்கொண்டார்கள்.