தொழுகையின் வாஜிபுகள்
பாகம் – 1
தொழுகையின் வாஜிபுகள் – واجبات الصلاة:
தொழுகையின் ஃபர்ளு(ருக்குன்) விடுபட்டால் அதை மீண்டும் செய்தே ஆக வேண்டும்; ஆனால் வாஜிப் விடுபட்டால் சஜ்தா சஹூ செய்தால் போதுமானது.
வாஜிப் :
غير تكبيرة الاحرام – தொழுகையில் ஆரம்ப தக்பீர்(تكبيرة الاحرام) தவிர மற்ற அனைத்து தக்பீர்களும் வாஜிப் ஆகும்.
ருக்கூவில் இருந்து எழும் போது இமாம் سَمِـعَ اللَّهُ لِمَـنْ حَمِـدَه; சொல்வது.
ருக்கூவில் سبحان رب العظيم; சொல்வது.
ருகூவில் ஓத கூடிய திக்ருகள்.
🔸سبحان رب العظيم
(முஸ்னத் இமாம் அஹ்மத், அபு தாவூத், இப்னு மாஜா)
நபி(ஸல்) سبحان ربي العظيم وبحمده ; என்றும் ஓதி இருக்கின்றார்கள்.
(சுனன் அபு தாவூத், சுனன் தார குத்னி, முஸ்னத் இமாம் அஹ்மத், தப்ரானி, பைஹகி)
🔸سبوح قدوس رب الملائکه والروح
(சஹீஹ் முஸ்லீம்)
🔸 سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي
(புஹாரி, முஸ்லிம்)
இது அல்லாது வேறு துஆக்களும் உள்ளன; நாம் இந்த துஆக்களை மட்டும் தற்போது அறிந்து கொள்வோம்.
سَمِـعَ اللَّهُ لِمَـنْ حَمِـدَه
ஓதிய பின் ஓதும் துஆகள்:
🔸ربنا لك الحمد
🔸ربنا ولك الحمد
🔸اللهم ربنا لك الحمد
🔸اللهم ربنا ولك الحمد
🔸اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ
(புஹாரி, அஹ்மத், சஹீஹ் முஸ்லிம்)
சுஜூதில் ஓத கூடிய திக்ருகள்:
🔸سبحان رب الاعلی
( அஹ்மத் , அபு தாவூத் , தாரகுத்னி, இப்னு மாஜா)
🔸سبحان رب الاعلی و بحمده
(அபுதாவூத், தாரகுத்னி, முஸ்னத் அஹ்மத்)
கருத்துரைகள் (Comments)