ஃபிக்ஹ்
நஜீஸ்களின் வகைகள் பாகம் – 1
சூரா அல் முத்தஸ்ஸிர் 74:4
وَثِيَابَكَ فَطَهِّرْ
➥ உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
சூரா அல்பகறா 2:222
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
➥ பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
❣ நபி (ஸல்) – சுத்தம் ஈமானின் பாதியாகும்
❣ செத்த பிராணி
இஸ்லாம் சொன்ன பிரகாரம் அறுக்கப்பட்ட பிராணிகள் ஹலாலானவை. அதை தவிர எப்படி செத்தாலும் அந்த பிராணிகள் ஹலாலானவை அல்ல (கழுத்து நெறிக்கப்பட்டது , அடிபட்டு இறந்தது, தானாக செத்தவை …..)
சூரா அல்மாயிதா 5:3
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ
➥ செத்தவைகள் உங்களுக்கு ஹராமாக்கப்பட்டிருக்கிறது.
விதிவிலக்குகள்
✥ மீன் செத்துப்போனாலும் நஜீஸ் அல்ல.
நபி (ஸல்) – கடல் நீர் தன்னிலும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும். அதில் செத்தவையும் ஹலால் தான்.
✥ இப்னு உமர் ரலி – நபி (ஸல்) – எங்களுக்கு இரண்டு மையத்துகள் ஹலாலாக்கப்பட்டிருக்கிறது மீனும் வெட்டுக்கிளியும்.
(முஸ்னத் இமாம் அஹ்மத், இப்னு மஜா, பைஹகீ, தாரகுத்னீ) இந்த ஹதீஸ் பலகீனமானதாக இருந்தாலும் அந்த ஸஹாபியின் செய்தி உண்மையானது என இமாம் அஹ்மத் கூறுகிறார்.
✥ எந்த உயிரினங்களின் உடம்பில் ஓடும் ரத்தம் இல்லையோ அவைகள் செத்தால் அது நஜீஸ் அல்ல (எறும்பு, தேனீப்பூச்சி).
✥ செத்த பிராணிகளின் எலும்பு, கொம்பு, நகம் போன்றவை கழுவினால் சுத்தமாகிவிடும்.
✥ இப்னு அப்பாஆஸ் (ரலி) – மைமூனா (ரலி) க்கு ஒரு ஆடு கொடுக்கப்பட்டது அது செத்துவிட்டது. நபி (ஸல்) – அதன் தோலை எடுத்து பதப்படுத்தியிருக்கலாமே அதில் பிரயோஜனமடைந்திருக்கலாமே – அதை உண்பது தான் ஹராம்.
கருத்துரைகள் (Comments)