ஃபிக்ஹ்
நஜீஸ்களின் வகைகள் பாகம் – 11
لا يبولن أحدكم فى مستحمه ثم يتوضأ فيه
✦ நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூச்செய்யுமிடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம் அதில் அதிகமான குழப்பங்கள் உள்ளன. ( ஸஹீஹ், முஸ்லீம்)
✦ தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கவேண்டாம் என நபி (ஸல்) தடுத்தார்கள். (அஹ்மத், நஸாயீ, இப்னு)
✦ ஆயிஷா (ரலி) – யாரேனும் நபி (ஸல்) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று சொன்னால் நீங்கள் அதை உண்மைப்படுத்தாதீர். (திர்மிதி)
✦ ஹுதைபா (ரலி) – நபி (ஸல்) ஒரு கூட்டத்தார் தம் குப்பைகளை கொட்டும் இடத்தில் நபி (ஸல்) நின்று சிறுநீர் கழித்தார்கள். நான் கொஞ்சம் தூரமாக நின்றேன் நபி (ஸல்) கொஞ்சம் அருகில் வரச்சொன்ன போது சென்றேன் நபி (ஸல்) உளூ செய்தார்கள்.
✦ ஆகவே அவசிய தேவையிருந்தால் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம் என மேற்கூறப்பட்ட ஹதீஸுகளிலிருந்து புரிகிறது.
கருத்துரைகள் (Comments)