ஃபிக்ஹ்
நஜீஸ்களின் வகைகள் பாகம் – 6
நாய்
❉ இஸ்லாம் அனுமதித்த 3 காரணங்களை தவிர வேறு நோக்கங்களுக்காக நாய் வளர்ப்பவர்கள் அமல்களில் 1 கீராத் நன்மை அவர்களது நன்மையிலிருந்து பறிக்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட 3 காரணங்கள்:
1. வேட்டை
2. விவசாயம் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க
3. வீட்டின் பாதுகாப்பிற்காக
لا تدخل الملائكة بيتاً فيه كلب ولا صورة
➥ நபி (ஸல்) – எந்த வீட்டில் நாயும் உருவப்படங்களும் இருக்கிறதோ அந்த வீட்டில் மலக்குமார்கள் நுழைய மாட்டார்கள்.
❉ ஒரு முறை ஜிப்ரஈல் (அலை) நபி (ஸல்) விடம் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால் சொல்லப்பட்ட நேரத்தில் அவர் வரவில்லை. ஏனெனில் நபி (ஸல்) வின் வீட்டில் கட்டிலின் அடியில் குட்டி நாயொன்று இருந்தது.
❉ நபி (ஸல்) – உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் நாய் நக்கிவிட்டால் அதை 7 முறை கழுவுங்கள் அதில் ஒரு முறை மண் சேர்த்து கழுவுங்கள்.
கருத்துரைகள் (Comments)