நபியை நம்பிக்கை கொள்வோம் பாகம் 2

ஸீரா பாகம் – 2

நபியை நம்பிக்கை கொள்வோம்

படைத்தவன் ஒருவன் தான் என்பதில் உலகில் யாருக்கும் கருத்துவேறுபாடு இல்லை. அல்லாஹ்வை அவனுடைய தூதர்களின் வழியாகத்தான் சரியான முறைப்படி நம்ப முடியும். தூதர்களின் வழிகாட்டுதல் இல்லையென்றால் அல்லாஹ்வை சரியான முறைப்படி புரிந்து கொள்ள முடியாது. அந்த தூதர்கள் உலக வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் வழிகாட்டினார்கள். அதே சமயம் அல்லாஹ்வை பற்றியும் அவனை வணங்க வேண்டிய முறையையும் கற்றுத் தந்தார்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் ஆனால் அகில உலகிற்கும் தூதராக அனுப்பப்பட்டவர் நம்முடைய முஹம்மது(ஸல்) ஆவார்கள்.

قُلْ يَاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُولَ الله اِلَيْكُمْ جَمِيْعَاْ الَّذِى لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْاَرْضِ لَا اِلَهَ اِلَّا هُوَ يُحْيِ وَيُمِيْتُ فَاَامِنُوْا بِاللهِ

وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِىْ يُؤْمِنُ بِاللهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ

(நபியே!) நீர் கூறுவீராக: ” மனிதர்களே மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்” வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை. அவனே உயிர்பிக்கின்றான்; அவனே மரணம் அடைய செய்கின்றான் – ஆகவே அல்லாஹ்வின் மீதும் எழுத படிக்கத்தெரியாத நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்.அவரும் அல்லாஹ்வின் மீதும் அவனின் வசனங்கள் மீதும் ஈமான் கொள்கிறார். அவரையே பின் பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.

ஸூரத்துல் அஃராஃப் – 158:

இறுதி நபியையும் அவருக்கு முன்னால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களையும் நாம் நம்பிக்கை கொள்வோம்.