ஸீரா பாகம் – 3
நபியை நம்பிக்கை கொள்வோம்
ஸூரத்துத் தவ்பா – 62 :
يَحْلِفُوْنَ بِاللّٰهِ لَـكُمْ لِيُرْضُوْكُمْۚ وَاللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَحَقُّ اَنْ يُّرْضُوْهُ اِنْ كَانُوْا مُؤْمِنِيْنَ
(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப் படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலும் தான்.
💠 அல்லாஹ்வை ஒருவன் திருப்திப் படுத்த நாடினால் அவனது தூதர் எப்படி வழி காட்டினாரோ அவ்வாறுதான் முடியும்.
💠 தொதர்களுடைய வழிகாட்டுதலை பின்பற்றாத காரணத்தினால் மனிதர்கள் தாமாகவே சிலவற்றை கடவுள்களாக ஆக்கிக் கொண்டார்கள்.
💠 தூதர்கள் உலக வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் வழி காட்டியதோடு மட்டுமல்லாமல் இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தார்கள்.
💠 உலகத்தில் உள்ள அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டவர் முஹம்மது நபி(ஸல்) ஆவார்.
💠 எந்த விதமான சஞ்சலமும் சந்தேகமும் இல்லாமல் முழுமையாக அல்லாஹ்வுடைய நபியை நாம் ஈமான் கொள்ளவேண்டும்.
கருத்துரைகள் (Comments)