ஸீரா பாகம் – 1
நேசம் இன்றி ஈமான் இல்லை
◈ அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதர் மீதும் நேசம் வைப்பது ஈமானின் ஒரு பகுதியாகும்.
◈ ஸஹாபாக்கள் மார்க்கத்தை இந்த அளவிற்கு பின்பற்றினார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதரின் மீதும் கொண்டிருந்த நேசமே அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
◈ அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காமல் அவர்களுடைய இஸ்லாமும் ஈமானும் முழுமையடையாது.
ஸூரத்துல் ஆதியாத்தி – 8:
وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
ஸூரத்துல் ஃபஜ்ரி – 20 :
وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ؕ
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
ஸூரத்துல் கியாமா – 20 :
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۙ
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
உலக விஷயங்களை நேசிப்பதில் தவறில்லை. ஆனால் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் விட அதிகமாக உலக விஷயங்களை நேசிக்கக் கூடாது.
கருத்துரைகள் (Comments)