நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 2

ஸீரா பாகம் – 2

நேசம் இன்றி ஈமான் இல்லை

நபி(ஸல்) அவர்களின் நேசம் :

  • நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் செய்த ஹிந்தாவை மன்னித்தார்கள்.
  • நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) வை, கொடூரமான முறையில் கொன்ற வஹ்ஷி யை மன்னித்தார்கள்.
  • மக்கா முஷ்ரிக்குகள் நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் இழைத்திருந்தும்; மக்கா வெற்றிக்குப் பின் அவர்கள் அனைவரையும் நபி(ஸல்) அவர்கள் மன்னித்தார்கள்.

ஸூரத்துல் இன்ஃபிதார் – 6:

கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

ஸூரத்துல் ஃபுர்ஃகான் – 70:

அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கும் போது அவன் மன்னிப்பதோடு மட்டும் இல்லாமல் கடந்த கால பாவங்களை நன்மைகளாக மாற்றும் கருணையாளன்.

ஸூரத்துல் பகரா- 165 :

நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்.

ஸூரத்துல்ஆல இம்ரான் – 31 :

அல்லாஹ்வை நேசித்தால் அவனுடைய நபியை பின்பற்றுங்கள்.

ஸூரத்துல் அன்கபூத் – 2, 3, 4:

அல்லாஹ் நிச்சயமாக  நம் அனைவரையும் சோதிக்கிறான்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது அல்லாஹ் மீது உள்ள நேசம் உண்மையானால் அவனுடைய நபியை பின்பற்றுமாறு அவன் கூறுகின்றான்.

நபியுடைய வாழ்வு நம்முடைய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். إن شاء الله ஒவ்வொரு நாளும் நாம் அதற்காக முயற்சி செய்வோமாக.