ஸீரா பாகம் – 3
நேசம் இன்றி ஈமான் இல்லை
எவரிடம் மூன்று பண்புகள் உள்ளதோ அவர் ஈமானுடைய சுவையை சுவைத்துவிடுவார்.
◉ அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் தன் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும்.
◉ தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும்.
◉ இறை நிராகரிப்புக்கு திரும்பி செல்வதை நெருப்பில் போடுவதை போன்று வெறுக்கவேண்டும்.
★ நபி(ஸல்) – தந்தையை விட, பிள்ளையை விட, உலகில் உள்ள அனைவரையும் விட, என்னை நேசிக்கும் வரை உண்மையான முஃமீனாக ஆக முடியாது.
♥ ஸூரத்துத் தவ்பா 9:24
அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதரையும் தவிர உலகில் வேறு எதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டாலும்; அல்லாஹ்வுடைய தண்டனையை எதிர்பார்த்து இருங்கள்.
கருத்துரைகள் (Comments)