ஃபிக்ஹ்
பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்
பாகம் – 12
பள்ளியில் சத்தமாக பேசக்கூடாது
💕 இப்னு உமர் (ரலி) – ஒரு முறை நபி (ஸல்) பள்ளிக்குள் வரும்போது மக்கள் தொழுதுகொண்டு சப்தத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) ஒரு மனிதர் தொழும்போது அவர் தன்னுடைய இறைவனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். அவர் எதை உரையாடுகிறார் என்பதை அவர் பார்த்துக்கொள்ளட்டும் உங்களிலொருவர் குர்ஆனை சத்தமாக ஓத வேண்டாம்.(அஹ்மத்- ஸஹீஹ்)
💕 ஜாபிர் இப்னு சமுரா (ரலி) – நபி (ஸல்) சுபுஹ் தொழுகையை தொழுதால் சூரியன் உதிக்கும் வரை அவ்விடத்தை விட்டு எழ மாட்டார்கள். அதன் பின் எழுந்து அங்கு சில மக்கள் ஜாஹிலிய்யா சம்பவங்களை பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுடன் நபி (ஸல்) புன்முறுவல் புரிவார்கள்(முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)