பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 07

ஃபிக்ஹ்

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள்

பாகம் – 7

பள்ளிவாசலை அலங்கரித்தல் 

💕 அனஸ் (ரலி) – நபி (ஸல்) – பள்ளிவாசல்களை அலங்கரிப்பதில் மக்களிடையே போட்டி போடும் வரை மறுமைநாள் வராது (முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

💕 நபி (ஸல்) – ஒரு காலம் வரும் அப்போது பள்ளிவாசலை கட்டுவதில் மக்கள் போட்டி போடுவார்கள் ஆனால் அதை சரியாக பராமரிக்க மாட்டார்கள் (இப்னு ஹுஸைமா)

💕 இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – பள்ளிகளின் சுவறுகளை உயர்த்திக்கட்டும்படி நான் ஏவப்பட்ட வில்லை (அபூதாவூத்,ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

💕 இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – யூத கிறிஸ்தவர்கள் அவர்களுடைய வணக்க ஸ்தலங்களை அலங்கரிப்பது போல நீங்களும் செய்வீர்கள் 

💕 உமர் (ரலி) பள்ளிவாசல் கட்டும்படி ஏவிவிட்டு மக்களுக்கு மழையிலிருந்து பாதுகாக்க ஒரு கூரையை போட்டுவிடுங்கள் அதில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களை பூசி மக்களை ஃபித்னா வில் ஆழ்த்திவிட வேண்டாம்.