மாதவிடாய் பாகம் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1

மாதவிடாய்

الحيض في اللغة العربية هو السيلان؛

ஹைல் என்ற சொல்லுக்கு அரபியில் நேரடி அர்த்தம் ஓடுதல்(இரத்தம்)

ஆரோக்கியமான நேரத்தில் ஒரு பெண்ணுடைய உறுப்பிலிருந்து வெளியாகக்கூடிய இரத்தத்திற்கு பெயர் தான் ஹைல் எனப்படும்.

⚜ அதிகமான அறிஞர்களின் கருத்துப்படி ஒரு பெண் 9 வயதிற்கு பிறகு பூப்பெய்கிறாள்  என்று கருதப்படுகிறது.

ஒரு பெண்ணின் மாதவிடாய் காலம் எந்த வயதில் முடியவேண்டும் என்ற எந்த வரைமுறையும் காணப்படவில்லை.

மாதவிடாய் இரத்தத்தின் நிறங்கள்

(1) கருப்பு நிறம்

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்களுக்கு தொடர் உதிரப்போக்கு (استحاضة) உள்ள பெண்ணாக இருந்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தன் நிலையை பற்றி கூறி மார்க்கச்சட்டம் கேட்டபோது நபி (ஸல்) மாதவிடாய்க்கான கருப்பு நிறத்தில் உதிரப்போக்கு இருந்தால் நீங்கள் தொழாதீர்கள் அது வேறு நிறத்திலிருந்தால் அது நோயின் காரணத்தினாலாக இருக்கலாம் ஆகவே உளூ செய்து தொழுதுகொள்ளுங்கள்.(ஸுனன் அபீதாவுத், நஸயீ, ஸஹீஹ் இப்னு ஹிப்பான், ஸுனன் தார குத்னீ – இமாம் ஹாக்கிம் இமாம் முஸ்லிம் அவர்களது நிபந்தனைகளுக்கு இது உட்ப்பட்டிருக்கிறது என்று அறிவிக்கிறார்கள்)