மாதவிடாய் பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

மாதவிடாய்

மாதவிடாயின் கால எல்லை

⚜ சில அறிஞர்கள் குறைந்தபட்ச நாட்கள் 1 என்றும் நடுநிலையாக 7 என்றும் அதிகபட்சமாக 15 என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் ஆனால் குர்ஆனிலும் ஹதீஸிலும் இதற்கு காலஅளவு குறிப்பிடப்படவில்லை.

சில அறிஞர்களின் கருத்துக்கள்

⚜ இப்னு தைமிய்யா (ரஹ்) அல்லாஹ் குர்ஆனிலும் ஹதீஸிலும் மாதவிடாயை பற்றி சில சட்டங்கள் கூறியிருக்கிறான். ஆனால் அதன் கால அளவை அதில் குறிப்பிடப்படவில்லை. ஒரு மாதவிடாயிற்கும் இன்னொரு மாதவிடாயிற்கும் இடையில் எத்தனை கால அளவு இருக்க வேண்டும் என்பதையும் அதில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே அதற்கு கால அளவை கூற முடியாது.யார் இதற்கு மாற்றமாக கால அளவு நிர்ணயித்து கருத்து தெரிவிக்கிறார்களோ அவர்கள் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக கருத்து தெரிவிக்கின்றனர் (பதாவா இப்னு தைமிய்யாஹ் 19 பாகம் 237 பக்கம் )

⚜ ஷேக் உஸைமீன் (ரஹ்) –

الحيض متى جاء فهو حيض ، سواء طالت المدة بينه وبين الحيضة السابقة أم

قصرت فإذا حاضت وطهرت

⚜மாதவிடாய் எந்த நேரத்தில் வந்தாலும் அது மாதவிடாய் தான். முதல் மாதவிடாயிற்கும் இரண்டாவது மாதவிடாயிற்கும் இடையிலுள்ள கால எல்லை நீளமாகவோ குறைவாகவோ இருக்கலாம். இரத்தம் வந்தால் அது மாதவிடாயாகவே கருதப்படும்.

⚜ ஆனால் ஒரு பெண்ணிற்கு தொடர்ந்து உதிரப்போக்கு வந்துகொண்டே இருந்தால் அவர்கள் المستحاضة என்ற நிலையில் இருப்பார்கள். அவர்கள் நோய் வரும் முன் சரியான உதிரப்போக்கு இருந்த காலத்தை வைத்து கணக்கெடுத்துக்கொள்ள வேண்டும்.

⚜ ஷேக் அப்துல் கரீமுல் ஹுதைர் என்ற ஹதீஸ் இரண்டு ஹைலுக்கு மத்தியில் எந்த கால எல்லையும் நிர்ணயிக்க முடியாது. எப்போது ஒரு பெண் மாதவிடாயின் இரத்தத்தை காண்கிறாளோ அப்போது அவள் மாதவிடாய் காலம் தொடங்கும். அது துர்நாற்றமுள்ள கருப்பு கலந்த நிறமான இரத்தமாக இருக்கலாம் என உதாரணம் கூறினார்கள்.

⚜ ஆகவே மாதவிடாய்க்கான சரியான கால எல்லையை நிர்ணயிக்க முடியாது என்பதே சரியான கருத்தாகும்.