வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்கள் 03

ஃபிக்ஹ் 

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்

பாகம் – 3

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) எனக்கு 3 உபதேசம் செய்தார்கள் அதில் ஒன்று தான் தூங்கும்முன் வித்ர் தொழ சொன்னார்கள்.

ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – அபூபக்கர் (ரலி) யை பார்த்து-எப்போது வித்ர் தொழுகிறீர்கள்?-ஈஷா விற்கு பிறகு- உமர் (ரலி) யிடம் கேட்டபோது-இரவின் கடைசி பகுதியில் – நபி (ஸல்) அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:‘நீங்கள் ஜாக்கிரதையாக வழிமுறையை த் தேர்வு செய்துள்ளீர்’. உமர்(ரலி) அவர்களிடம் கூறினார்கள்: ‘ உமரே நீங்கள் மனஉறுதி மிக்க வழிமுறையை த் தேர்வு செய்துள்ளீர்’. 

(அஹ்மத், அபூதாவுத், ஹாகிம். இது முஸ்லிம் அவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று ஹாகிம் கூறுகிறார்).