வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 02

ஃபிக்ஹ் 

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்

பாகம் – 2

வித்ரின் நேரம் 

அபூ பாஸரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ் உங்களுக்கு இன்னுமொரு தொழுகையை அதிகப்படுத்தி தந்திருக்கிறான் அது வித்ர் தொழுகையாகும் அதை இஷா வுக்கும் ஃபஜர்க்கும் இடையில் தொழுங்கள் (அஹ்மத்)

ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – யார் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து வித்ரு தவறி விடும் என்று பயந்து விடுகிறாரோ அவர் இஷாவுக்கு பிறகு அதை தொழுது கொள்ளட்டும். யார் இரவின் கடைசி நேரத்தில் தொழலாம் என்று உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள் அந்த நேரத்தில் தொழட்டும் அது மலக்குமார்கள் வரும் நேரமாகவும் சிறந்த நேரமாகவும் இருக்கிறது. (முஸ்லீம்)