ஃபிக்ஹ்
வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்
பாகம் – 5
வித்ரை எவ்வாறு தொழ வேண்டும்
❣ 3 ரக்காஅத் ஆக தொழும்போது
ஒற்றைப்படையில் ஒரே ஸலாமில் தொழலாம்
ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வித்ருடைய 2 ரக்காஅத்தில் ஸலாம் கொடுக்க மாட்டார்கள்
❣ இன்னொரு அறிவிப்பில்
நபி (ஸல்) – 3 ரக்காஅத் வித்ரு தொழுவார்கள் கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத்தில் அமர்வார்கள் (நஸாயீ, பைஹகீ)
❣ இரண்டிரண்டாக தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு ஒரு ரக்காஅத் தொழலாம்:
இப்னு உமர் (ரலி) – இரண்டிரண்டு ரக்காஅத்துகளாக தொழுது ஸலாம் கொடுப்பார்கள் பிறகு ஒரு ரக்காஅத் தொழுது ஸலாம் கொடுத்து விட்டு கூறினார்கள்; இப்படித்தான் நபி (ஸல்) செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்-ஃபதஹுல் பாரியில் இப்னு ஹஜர் (ரஹ்) இந்த ஹதீதின் அறிவிப்பாளர் வரிசை உறுதியானது என்று கூறுகிறார்கள்.
கருத்துரைகள் (Comments)