ஹதீத் பாகம் – 23
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
ஸூரத்து ஃபாத்திர் 35 : 5, 6
(5) மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
(6) நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.
اصحاب السعير جمعه سعر قال مجاهد الغرور الشيطان
முஜாஹித் (ரஹ்) – الغرور என்றால் ஷைத்தான் (ஏமாற்றக்கூடியவன்)
கருத்துரைகள் (Comments)