ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 48

ஹதீத் பாகம் – 48

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

⚜  عن عروة عن عائشة أنها قالت لعروة ابن أختي إن كنا لننظر إلى الهلال

ثلاثة أهلة في شهرين وما أوقدت في أبيات رسول الله صلى الله عليه وسلم

نارفقلت ما كان يعيشكم قالت الأسودان التمر والماء إلا أنه قد كان لرسول الله

صلى الله عليه وسلم جيران من الأنصار كان لهم منائح وكانوا يمنحون رسول الله

صلى الله عليه وسلم من أبياتهم فيسقيناه

ஆயிஷா (ரலி) உர்வா அவர்களை பார்த்து சொன்னார்கள்-என் சகோதரியின் மகனே நாங்கள் 2 மாதங்கள் 3 பிறைகளை பார்த்தோம் நபி (ஸல்) அவர்களுடைய வீடுகளில் எங்கும் விளக்கு எரியாது. அப்போது உர்வா அவர்கள் அப்படியாயின் நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்? – ஆயிஷா (ரலி) இரண்டு கருப்புக்களை கொண்டு-ஈத்தம்பழமும் தண்ணீரும். சில சமயங்களில் அண்டை வீட்டு அன்சாரிகளிடம் மனாஇஹுகள்(அன்பளிப்பாக பெறப்பட்ட ஆட்டுப்பால்கள்) இருக்கும் அதிலிருந்து குடிப்போம் என்று பதிலளித்தார்கள்.

⚜  عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم

ارزق آل محمد قوتا

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – முஹம்மதுடைய குடும்பத்திற்கு உணவு கொடுப்பாயாக

வேறொரு அறிவிப்பில்

நபி (ஸல்) – முஹம்மதுடைய குடும்பத்திற்கு உணவை போதும் என்ற அளவிற்கு உணவை கொடுப்பாயாக

⚜ நபி (ஸல்) – அல்லாஹ் என்னிடம் மக்காவின் பத்ஹா என்ற இடத்தை தங்கமாக்கி தரவா என்று கேட்டான் நான் வேண்டாம் என்று சொன்னேன். நான் சாப்பிடும் நாளில் உனக்கு நன்றி கூறுவேன் பசித்திருக்கும்போது உன்னை நினைத்து உன்னிடம் வருவேன் என்று கூறினேன்.