ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 51

ஹதீத் பாகம் – 51

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال سددوا وقاربوا واعلموا أن لن

يدخل أحدكم عمله الجنة وأن أحب الأعمال إلى الله أدومها وإن قل

 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) கூறினார்கள் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் நெருங்குங்கள் அறிந்து கொள்ளுங்கள் உங்களில் எவரையும் உங்கள் அமல்கள் சொர்க்கத்தில் கொண்டு சேர்த்து விடாது அல்லாஹ்விடத்தில் மிகவும் விருப்பமான அமல் தொடர்ந்து செய்யும் அமலாகும்.

 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) விடம் நபி (ஸல்) கூறினார்கள் நீங்கள் இரவில் தொழுதுகொண்டிருந்து அதை விட்டு விட்ட மனிதரை போல ஆகி விட வேண்டாம்

 عن عائشة رضي الله عنها أنها قالت سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال

أحب إلى الله قال أدومها وإن قل وقال اكلفوا من الأعمال ما تطيقون

 ஆயிஷா (ரலி) – அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான அமல் எது என்று நபி (ஸல்) விடம் வினவப்பட்டது. குறைந்திருந்தாலும் தொடர்ந்து செய்யும் அமலாகும் என பதிலளித்தார்கள். பிறகு கூறினார்கள் உங்களால் முடிந்த அமல்களில் உங்களை ஈடுபடுத்துங்கள்.