ஸீரா பாகம் – 12
உன் நபியை அறிந்துகொள்
❤ முஸ்லிம்கள் மிக அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அப்போது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய அனுமதி பெற்று ஹிஜ்ரத் செய்ய அறிவுரை செய்தார்கள்.
❤ நபித்துவத்தின் 5 – 6 ஆண்டு சில முஸ்லிம்கள் ஹபஷா சென்றார்கள்.
❤ பிறகு 83 ஆண்களும் 19 பெண்களும் 6 ஆம் ஆண்டு ஹபஷா சென்றனர்.
❤ ஹபஷா மன்னரை முஸ்லிம்களுக்கு ஏதிராக திரும்புவதற்காக மக்கா முஷ்ரிக்குகள் சிலரை அனுப்பினார்கள். ஆனால் அவர்களது முயற்சி வீணடிக்கப்பட்டுவிட்டது.
❤ நபி (ஸல்) துன்புறுத்தப்பட்டார்கள் அபூ ஜஹல் நபி (ஸல்) வின் மீது ஒட்டகத்தின் அசுத்தங்களை போடுவதற்கு கட்டளையிட்டான்.
❤ நபி (ஸல்) ஸஜ்தா செய்யும்போது மிதிக்க வந்தான். நபி (ஸல்) வை கொலை செய்ய முயற்சித்தார்கள். இது போன்ற பல விதமான தொல்லைகள் நபி(ஸல்) விற்கு குறைஷிகளால் ஏற்பட்டது.
❤ ஒரு பிரச்சனைக்கு பிறகு ஹம்சா (ரலி) இஸ்லாத்தை தழுவினார்கள் பிறகு சிறிது காலத்திலேயே உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவினார்கள்.
❤ உமர் (ரலி) வின் இஸ்லாம் நபியுடைய பிரார்த்தனையின் பிரதிபலிப்பாக இருந்தது.
❤ அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) – நாங்கள் பலஹீனமாக இருந்தோம் உமர்(ரலி) இஸ்லாமை தழுவியபோது அல்லாஹ் எங்களுக்கு கண்ணியத்தை கொடுத்தான்.
❤ உமர் (ரலி) இஸ்லாத்திற்கு வந்த பின் முஸ்லிம்கள் கஃபா வில் தைரியமாக தொழ ஆரம்பித்தார்கள்.
கருத்துரைகள் (Comments)