ஸீரா பாகம் – 22
உன் நபியை அறிந்துகொள்
❁ அல்லாஹ் உங்களை எதிர்ப்பவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் என அல்லாஹ் அனுமதியளித்தான்.
❁ நபி (ஸல்) எந்த போர்களில் கலந்து கொண்டார்களோ அந்த போர்களுக்கு மார்க்கத்தில் கஸ்வா என்று சொல்லப்படும்.
❁ 18-24 போர்களில் நபி (ஸல்) கலந்திருக்கிறார்கள். அதில் போர் நடந்தது குறைவு தான்(ஏறக்குறைய 9 போர்கள்) மற்றவையெல்லாம் போர் நடக்காமல் வந்தவை தான்.
❁ எதில் நபி (ஸல்) தங்களது தோழர்களை மட்டும் அனுப்பினார்களோ அந்த போருக்கு ஸரிய்யா என்று சொல்லப்படும்.
❁ நபி (ஸல்) ஏறக்குறைய 64 ஸரிய்யா க்களை; சிறிய யுத்தக்குழுக்களை போருக்காக அனுப்பினார்கள்.
❤ ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு நடந்த யுத்தங்கள்
- அபுவா
- புவாத்
- உஷைரா
- சஃப்வான்
- பெரிய பதர்
- பனூ சுலைம்
- பனூ கைனுகா
- சவீக்
❁ பெரிய பதரிலும் கைனுகாவிலும் தான் யுத்தம் நடந்தது. மற்ற போர்களிலெல்லாம் சந்திப்பதற்காக சென்றார்கள் ஆனால்; அங்கு போர் நடக்கவில்லை.
கருத்துரைகள் (Comments)