ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் – 34

ஸீரா பாகம் – 34

உன் நபியை அறிந்துகொள்

நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு அடிமைப்பெண்கள் :

  • மாரியா பின்த் ஷம்ஊன் (மிஸ்ர் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பப்பட்டவர்கள்)
    இப்ராஹீம் என்ற குழந்தை பிறந்தது
  • ரைஹானா பின்த் ஜைது (ரலி)

நபி(ஸல்) வின் பிள்ளைகள் :

நபி(ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) மூலமாக தான் எல்லா பிள்ளைகளும் பிறந்தார்கள் இப்ராஹீம் என்ற குழந்தையை தவிர

நபி(ஸல்) வின் ஆண் மக்கள் :

  • காசிம்
  • அப்துல்லாஹ்

இவர்கள் இருவரும் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.

நபி (ஸல்) வின் பெண் மக்கள் :

  • ஜைனப் (ரலி) – அபுல் ஆஸ் இப்னு ரபீஹ் மனம் முடித்தார்கள். பத்ர் போரில் பிடிக்கப்பட்ட கைதிகளில் அவரும் ஒருவராக இருந்தார்கள். அவரை விடுவிப்பதற்காக கதீஜா (ரலி) அவர்களின் மாலை கொடுத்தனுப்பப்பட்டது. அவரை விடுவிக்கும்போது என் மகள் ஸைனப் (ரலி) ஐ என்னிடம் அனுப்பிவிட வேண்டும் என்று கட்டளையிட்டு அவரை விடுவித்தார்கள். பிறகு அபுல் ஆஸ் இப்னு ரபீஹ் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுவிட்டார்கள்.
  • பாத்திமா (ரலி) – அலீ இப்னு அபீதாலிப் (ரலி) மணம்முடித்தார்கள்
  • ருகையா (ரலி)
  • உம்மு குல்தும் (ரலி)

இவர்கள் இருவரையும் அபூலஹபின் மகன்கள் மணம்முடித்திருந்தார்கள். நபி(ஸல்) இஸ்லாத்தை அறிவித்ததும் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு பிறகு உஸ்மான்(ரலி) இவர்கள் இருவரையும் ஒருவர் பின் ஒருவராக மணம்முடித்தார்கள்.