حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 15
الدعاء لمن لبس ثوباً جديداً
புதிதாக ஆடை அணிந்தவரை நோக்கி சொல்லும் துஆ :
تُبْلي ويَخْلِفُ الله تعالى
நன்றாக உடு அல்லாஹ் உனக்கு பின்னால் இன்னும் அதிகமாக தருவான்
நன்றாக உடு ↔ تُبْلي – ابلى
– பின்னால் (பிறகு) ↔ ويَخْلِفُ – خلف
《☆》 இந்த செய்தி மேற்கூறப்பட்ட ஜுரைரீ அவர்களது செய்தியில் கூடுதலாக வரும் செய்தியாகும். ஆகவே இது ஆதாரமற்றதாகும்.
إلبِسْ جَدِيداً وعِشْ حميداً ومُتْ شهيداً
إلبِسْ جَدِيداً وعِشْ حميداً ومُتْ شهيداً
புதிய ஆடை அணியுங்கள் ↔ إلبِسْ جَدِيداً
புகழுக்குரியவராக வாழுங்கள் ↔ وعِشْ حميداً
ஷஹீதாக மரணியுங்கள் ↔ ومُتْ شهيداً
قال الإمام أحمد رحمه الله (ج2ص88): حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَىَ آلِهِ وَسَلَّمَ عَلَى عُمَرَ ثَوْبًا أَبْيَضَ فَقَالَ أَجَدِيدٌ ثَوْبُكَ أَمْ غَسِيلٌ فَقَالَ فَلَا أَدْرِي مَا رَدَّ عَلَيْهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَعَلَىَ آلِهِ وَسَلَّمَ : ( الْبَسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا)
《☆》 நபி (ஸல்) உமர் (ரலி) யை பார்த்து இந்த வெள்ளை ஆடையை நீங்கள் துவைத்து உடுத்தீர்களா அல்லது புதிய ஆடையா என்று கேட்டார்கள் அதற்கு உமர் (ரலி) என்ன பதிலளித்தார்கள் என்று தெரியவில்லை அப்போது புதிய ஆடை அணிந்து புகழுக்குரியவராக வாழ்ந்து ஷஹீதாக மரணியுங்கள் என்று உமர் (ரலி) விற்காக துஆ செய்தார்கள். ஆகவே இது உமர் (ரலி) மட்டும் உள்ள துஆ வாகும்.
ஹதீஸ் கலை
நுட்பமான குறை العلل
《☆》 ஹதீஸ்களை அறிஞர்களுக்கு மட்டுமே அறியக்கூடிய நுட்பமான குறைபாடுகளை இலல் என்று கூறுவார்.இது மஹ்மரின் செய்தியல்ல என்று அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். மேலும் இது நிராகரிக்க தக்க ஹதீஸ் என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.இமாம் புஹாரி மேலும் அவரது மாணவர் திர்மிதி உள்ளிட்ட அறிஞர்கள் இதை நிராகரிக்கத்தக்க செய்தி என்று இதை மறுக்கின்றனர்.
புஹாரி 3071
عن أُمِّ خَالِدٍ بِنْتِ خَالِدٍ {أُتِيَ النَّبِيُّ -صلى الله عليه وسلم- بِثِيَابٍ فِيهَا خَمِيصَةٌ سَوْدَاءُ صَغِيرَةٌ فَقَالَ: مَنْ تَرَوْنَ أَنْ نَكْسُوَ هَذِهِ فَسَكَتَ الْقَوْمُ قَالَ ائْتُونِي بِأُمِّ خَالِدٍ .فَأُتِيَ بِهَا تُحْمَلُ فَأَخَذَ الْخَمِيصَةَ بِيَدِهِ فَأَلْبَسَهَا ،وَقَالَ: أَبْلِي وَأَخْلِقِي .وَكَانَ فِيهَا
عَلَمٌ أَخْضَرُ أَوْ أَصْفَرُ فَقَالَ:يَا أُمَّ خَالِدٍ هَذَا سَنَاهْ وَسَنَاهْ بِالْحَبَشِيَّةِ حَسَنٌ
《☆》 உம்மு ஹாலித் – நான் ஒரு புதிய மஞ்சள் நிற ஆடையை
அணிந்திருந்தேன் நபி (ஸல்) அழகு அழகு என்று கூறினார்கள் பிறகு நான் நபி (ஸல்) வின் முதுகில் இருக்கும் நபித்துவ முத்திரையில் விளையாட ஆரம்பித்தேன். அப்போது அவரது தந்தை அவர்களை பிடித்து இழுத்தபோது அப்போது நபி (ஸல்) அவர்களை விடுங்கள் என்றார்கள் பின்னர் என்னை பார்த்து أَبْلِي وَأَخْلِقِي என்று 3 முறை கூறினார்கள்.
சாப்பிட்டு முடித்த உடன்:
الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَاபுதிய ஆடை அணிந்தவரை நோக்கி : أَبْلِي وَأَخْلِقِي |
கருத்துரைகள் (Comments)