حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 16 A
ما يقول إذا وضع الثوب – ஆடையை களைந்தால் என்ன கூறவேண்டும்
《☆》 இந்த துஆ உண்மையில் மலஜலம் கழிப்பதற்காக ஆடையை களையும்போது ஓதும் துஆ என்ற தலைப்பில் கொண்டு வந்திருக்க வேண்டும்.
《☆》 நபித்தோழர்கள் பலர் மூலம் அறிவிக்கப்பட்டதாக கருதப்படும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பல சிக்கல்கள் இருக்கின்றன.
சில அறிவிப்புகளில் இந்த துஆ بسم الله اللهم إني أعوذ بك من الخبث والخبائث என்று இடம் பெறுகிறது
இன்னும் சில அறிவிப்புகளில் நபி (ஸல்) ஆடையை களைந்தால் இதை ஓதுவார்கள் என்றும்
இன்னும் சில அறிவிப்புகளில் நபி (ஸல்) கழிப்பிடத்திற்கு நுழைந்தால் اللهم إني أعوذ بك من الخبث والخبائث என்று கூறுவார்கள் மேலும் ஆடையை களைந்தால் بسم الله என்று கூறுவார்கள் என்று இடம்பெறுகிறது.
《☆》 அனைத்தும் ஒரே ஹதீஸ் தான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
கருத்துரைகள் (Comments)