ஹிஸ்னுல் முஸ்லிம் 16B

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 16 B

ستر ما بين الجن وعورات بني آدم إذا دخل الكنيف: أن يقول: بسم الله

《☆》 அலீ (ரலி) – நபி (ஸல்) – ஆதமுடைய மக்களுடைய மர்மஸ்தானத்திற்கும்  ஜின்களுக்கும் இடையே  உள்ள திரையே அவர்கள் கழிப்பிடத்திற்கு சென்றால் பிஸ்மில்லாஹ் என்று கூறுவது தான்.

ستر ما بين أعين الجن وعورات بني آدم إذا نزعوا ثيابهم أن يقولوا بسم الله

《☆》 அனஸ் இப்னு மாலிக் (ரலி) – நபி (ஸல்) – ஆதமுடைய மக்களுடைய மர்மஸ்தானத்திற்கும்  ஜின்களுக்கும் இடையே  உள்ள திரையே அவர்கள் ஆடையை களைந்தால் பிஸ்மில்லாஹ் என்று கூறுவது தான்.

سِتْرُ ما بَيْنَ أعْيُن الجِنِّ وَعَوْرَاتِ بَني آدَمَ إذا وَضَعَ أحدُهُمْ ثَوْبَهُ أنْ يقول: ” بِسم الله

《☆》 அனஸ் இப்னு மாலிக் (ரலி) – நபி (ஸல்) – ஆதமுடைய மக்களுடைய மர்மஸ்தானத்திற்கும்  ஜின்களுக்கும் இடையே  உள்ள திரையே அவர்கள் ஆடையை களைந்தால் பிஸ்மில்லாஹ் என்று கூறுவது தான்.

《☆》 இமாம் தாரகுத்னீ (கிதாபுல் இலல், 12ஆம் பாகம் 101 ஆம் பாகத்தில் கூறுகிறார்) – இது நிரூபணமில்லாத அறிவிப்பாளர்களை கொண்ட செய்தி ஆகவே இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

《☆》 இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ – இந்த தலைப்பில் எந்த கருத்தும் ஆதாரபூர்வமானதல்ல.

《☆》 பிற்காலத்து அறிஞர்களில் அல்பானி, பின் பாஸ் போன்றவர்கள் இதை ஹசன் தரம் என்று அறிவிக்கிறார்கள். எனினும் ஆரம்ப கால அறிஞர்களின் கருத்தே இந்த விஷயத்தில் பலமாக இருக்கிறது.

சுருக்கம் :

《☆》 இந்த ஹதீஸ் அனஸ் (ரலி), அலி (ரலி), அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி),முஹாவியத் இப்னு ஹைதா (ரலி), போன்ற நபித்தோழர்கள் அறிவித்திருப்பதாக இருக்கும் எந்த செய்தியும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்று இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இது 3 விதமாக வந்துள்ளது

(1) பொதுவாக ஆடையை களைந்தால்

(2) குளிப்பறையில் ஆடையை களைந்தால்

(3) கழிவறையில் நுழையும்போது கூறும் பிஸ்மில்லாஹ்

🍁 மேற்கூறப்பட்ட 3 செய்திகளும் பலஹீனமான ஆதாரமற்ற செய்திகளாகும்.

🍁 ஆகவே ஆடை களையும் நேரத்தில் எந்த துஆவும் இல்லையென்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.