பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 3
சயீத் அல் கஹ்தான் என்ற இந்த நூலாசிரியர் எழுபதிற்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார்.
وظلمات البدعة في ضوء الكتاب والسنة குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் பித்அத்தின் இருள்கள்.
نور التوحيد وظلمات الشرك في ضوء الكتاب والسنة தவ்ஹீதின் ஒளி குர் ஆன் சுன்னத் அடிப்படையில்,
குர் ஆன் சுன்னத் ஒளியில் ஜகாத்,
குர் ஆன் சுன்னத் அடிப்படையில் பிரயாணத்தொழுகை.
என நேர்த்தியான முறையில் அழகிய நடையில் தொகுத்திருக்கிறார் என்பதை காண முடிகிறது. தற்போது அவர் ரியாத்தில் இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது.
ஹிஸ்னுல் முஸ்லிம் என்ற இந்த நூல் நாற்பத்து மூன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வந்துள்ளது.
இந்த நூலுக்கு விரிவுரையும் வந்திருக்கிறது. அதை தன்னுடைய மேற்பார்வையில் வேறொரு விரிவுரையை மாற்றியமைத்தார். திக்ரின் சிறப்புக்களாக இமாம் இப்னுல் கைய்யிம் அவர்களது தொகுப்பில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பதிவுகளை அதில் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்.
நூலின் பிரதிகள் பற்றிய குறிப்பு:
இதில் பல பிரதிகள் இருக்கின்றன. அதில் சில கருத்துக்களை அவர் பின்வாங்கியது தெரியாமல் பழைய பிரதிகளை அச்சடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரைகள் (Comments)