حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 32
24- “يصلي على النبي صلى الله عليه وسلم بعد فراغه من إجابة المؤذن
பாங்கிற்கு பின்னால் நபி (ஸல்) வின் மீது ஸலவாத் சொல்ல வேண்டும்
((عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا
يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي
الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ ))
《☆》 அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் (ரலி) – நபி (ஸல்) முஅத்தின் சொல்வதை கேட்டால் அவர் சொல்வதைப்போல நீங்கள் சொல்லுங்கள் பின்னர் என் மீது ஸலவாத்து சொல்லுங்கள். நிச்சயமாக யார் என் மீது ஒரு முறை ஸலவாத்து சொல்கிறாரோ அல்லாஹ் அவர் மீது 10 முறை அருள் புரிகிறான்.பின்னர் எனக்கு அல்லாஹ்விடத்தில் வஸீலாவை கேளுங்கள். அது சுவர்க்கத்தில் இருக்கக்கூடிய ஒரு தரம் அல்லாஹ்வுடைய அடியார்களில் ஒரே ஒரு அடியாருக்கு தான் அது கிடைக்கும் அது நானாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.யார் எனக்காக அப்படி கேட்கிறார்களோ அவர்களுக்கு நான் பரிந்துரை செய்வேன்.(முஸ்லீம்)
கருத்துரைகள் (Comments)