حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 33
25- “اللهم رب هذه الدعوة التامة ،والصلاة القائمة، آت محمداً الوسيلة والفضيلة، وأبعثه مقاماً محموداً الذي وعدته،
[ إنك لا تخلف الميعاد]
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ :
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاةِ الْقَائِمَةِ ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي
وَعَدْتَهُ ، حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ “
🌹 ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) – நபி (ஸல்) – பங்கை கேட்கும்போது யார்
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاةِ الْقَائِمَةِ ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي
وَعَدْتَهُ
என்று யார் கூறுகிறாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை மறுமையில் நிச்சயமாக உண்டு.
🌹 (சுனனுல் குப்ரா 1933 – பைஹகீ ) இல் வரும் அறிவிப்பில் இந்த செய்தி إنك لا تخلف الميعاد என்ற வார்த்தையுடன் சேர்த்து வருகிறது. இமாம் புஹாரி இதை தனது ஸஹீஹில் அலீ இப்னு அய்யாஷ் என்பவர் வழியாக இதை பதிவு செய்த்திருக்கிறார்.
🌹 இமாம் புஹாரியிடமிருந்து 70,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானவர் ஃபரப்ரீ என்பவர். அவரிடமிருந்து நிறைய மாணவர்கள் அறிவித்திருக்கிறார்கள் அதிலொருவர் குஷ்மைஹனீ என்பவர். இந்த குஷ்மைஹனீ அவர்களது பிரதியில் إنك لا تخلف الميعاد என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது.
🌹 அறிஞ்சர்களின் கருத்துப்படி குஷ்மைஹனீ எங்காவது முரண்பட்ட கருத்துக்கள் பதிவு செய்திருந்தால் அவரது கருத்துக்களை ஏற்க முடியாது. காரணம் அவர் ஹாஃபிழாகவோ ஹதீஸ் களை மனனம் செய்தவராகவோ ஹதீஸ் துறையில் தேர்ச்சி பெற்றவராகவோ இருக்கவில்லை. ஆனால் ஹதீஸ்களை பிறருக்கு கொண்டு சேர்க்கும் ஆர்வமும் நேர்மையும் உடையவராக அவர் இருந்தார்.
🌹 வேறு எந்த வழிகளிலும் வந்த அறிவிப்புகளில் இந்த
إنك لا تخلف الميعاد என்ற வார்த்தைகளை காணவும் முடியவில்லை.
கருத்துரைகள் (Comments)