ஹிஸ்னுல் முஸ்லிம் 35

حصن المسلم

பிரார்த்தனைப் பேழை

(முஸ்லிமின் அரண்)

PART – 35️

27-أذكار الصباح والمساء

காலை மாலை துஆக்கள்

துஆ 75:

أعوذ بالله من الشيطان الرجيم { اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا

فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَيُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا

شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ}

《☆》 أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حم المؤمن إلى إليه المصير وآية الكرسي

حين يصبح حفظ بهما حتى يمسي ومن قرأهما حين يمسي حفظ بهما حتى يصبح

قال أبو عيسى هذا حديث غريب

وقد تكلم بعض أهل العلم في عبد الرحمن بن أبي بكر بن أبي مليكة المليكي من قبل حفظه

1 – அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) கூறினார்கள் எந்த ஒரு முஃமின்; ஹாமீம் சூராவை இலைஹில் மஸீர் என்ற ஆயத் வரையும், ஆயத்துல் குர்ஸியையும் ஓதுகிறாரோ காலையில் ஓதினால் மாலை வரையும் மாலை ஓதினால் காலை வரையிலும் பாதுகாவல் கிடைக்கும் (திர்மிதி 2879)

இதை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே غريب (இமாம் திர்மிதியின் உஸூலில் லயீப் என்று அர்த்தம்) மேலும் இமாம் பகவி غريب என்கிறார்கள்.

இதில் அப்துல் ரஹ்மான் இப்னு அபூபக்கர் இப்னு அபீ முலைக்கா என்பவரது மனன சக்தியில் விமர்சனம் உள்ளது.

இமாம் பஸ்ஸார் மற்றும் இமாம் முகைலி – இது போன்ற ஒரு அறிவிப்பு இந்த அறிவிப்பாளர் வரிசையைத்தவிர வேறெதிலும் நாங்கள் காணவில்லை.

இமாம் நவவி – பலஹீனமான அறிவிப்பாளர் வரிசையில் இது கிடைத்திருக்கிறது(அல் அத்கார்).