حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 36
ورواها النسائي أيضا في عمل اليوم والليلة من طريق أخرى عن أبي هريرة (958) وفيها ” آية
الكرسي أقرأها عند كل صباح ومساء “قال أبو هريرة : فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال : ” أو ما
علمت أنه كذلك ؟ “ .
அபூஹுரைரா (ரலி) – ஷைத்தான்; ஆயத்துல் குர்ஸி கற்றுத்தந்த அந்த ஹதீஸில் ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆயத்துல் குர்ஸியை ஓதினால் ஷைத்தானிடமிருந்து தப்பிவிடுவீர்கள் (இமாம் நஸாயீ – சுனனுல் குப்ரா 7963, அமலில் யவ்ம் வல்லைலா)(பலகீனமானது)
✥ இப்னு சீரீன் வழியாக இதே செய்தி; உறங்கச்செல்லும்போது ஆயத்துல் குர்ஸி ஓதினால் ஷைத்தான் வரமாட்டன் என்று வருகிறது(ஸஹீஹ் புஹாரி)
✥ இந்த செய்தியை அபூ ஹுரைரா (ரலி) இடமிருந்து அபுல் முத்தவக்கில் என்பவர் அறிவிக்கிறார் ஆனால் அபூஹுரைரா (ரலி) யின் மிக நெருக்கமான மாணவர்களில் ஒருவர் இப்னு சீரீன் (அபூஹுரைரா (ரலி) இடமிருந்து இப்னு ஸீரீன் அறிவித்தால் அது தான் அறிவிப்பு என்று உலமாக்கள் கருத்து இருக்கிறது).
✥ இந்த அறிவிப்பில் முறிவுற்ற செய்தி இருக்கிறது.
✥ உபை இப்னு கஹப் (ரலி) இடம் ஷைத்தான் வந்து ஆயத்துல் குர்ஸி ஓதச்சொன்னதாக; அதே போன்ற ஒரு அறிவிப்பு இருக்கிறது.
இதே செய்தி (முஹ்ஜமுல் கபீர் – தபறானீ 5401)
✥ இந்த சம்பவம் இருவருக்கும் நடந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
✥ இந்த அறிவிப்பில் முஹம்மது இப்னு உபை இப்னு கஹப் என்பவர் அறியப்படாதவர்.ஆகவே இது பலஹீனமானது
✥ ஹிஸ்னுல் முஸ்லீம் புத்தகத்தில்
وصححه الألباني في صحيح الترغيب والترهيب 1/ 273
(ஷேக் அல்பானி இதை ஸஹீஹாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது) ஆனால் அல்பானி அவர்கள் இதை(ஸில்ஸிலத்துல் ஆஹாதீசு லயீப் என்ற புத்தகத்தில் லயீப் என்ற தரத்தில் தான் பதிவு செய்திருக்கிறார்கள்).
கருத்துரைகள் (Comments)